1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 29 ஏப்ரல் 2021 (17:51 IST)

3 வது முறை அஜித்துடன் கரம்கோர்க்கும் ஹெச்.வினோத்

நடிகர் அஜித்குமாரின் வலிமை படத்தின்  முதல்லுக் போஸ்டர் ரிலீஸ்தேதி தள்ளிப்போனதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாய் ஒரு முக்கிய தகவல் வெளியாகிறது.

அமிதாப் மற்றும் முக்கிய நடிகர்களில் நடிப்பில் வெளியாகி இந்தியில் வெற்ற் பெற்ற படம் பிங்க். இப்படம் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றது. இப்படத்தை போனிகபுர் தயாரித்தார். இது பெரும் வெற்றி பெற்றது.

இப்படம் தெலுங்கில் வக்கீல் சாப் என்ற பெயரில் பவன் கல்யான் நடிப்பில் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்றுள்ளது.

தற்போது வலிமை படத்தில் இரண்டாவது முறையாக அஜித்குமாருடன் ஹெச்.வினோத் இணைந்துள்ளார். இப்படத்திற்கு இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் விரைவில் ஹெச். வினோத் மற்றும் அஜித்குமார் இணைந்து 3 வது முறையாக கைகோர்க்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகிறது.நடிகரின் அஜித்தின் #Thala61 படமாக இருப்பதால் மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  இந்த அறிவிப்பு வலிமை அப்டேட் கவலை மறக்கடிக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.