1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 6 செப்டம்பர் 2021 (16:44 IST)

'வலிமை 'படம் தீபாவளிக்கு ரிலீஸ்??...டுவிட்டரில் டிரெண்டிங்

அஜித்தின் வலிமை படம் தீபாவளியில் ரிலீஸ் ஆக வேண்டுமென்று இன்று அஜித் ரசிகர்கள் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் தற்போது, வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை போனிகபூர் இயக்கி வருகிறார்.

நீண்ட நாட்களாக ரசிகர்கள் அப்டேர்ட் கேட்ட நிலையில் சமீபத்தில் வெளியான மோஸன் போஸ்டர், ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் யுவன் இசையில் அசத்தலான முதல் சிங்கில்NaangVeraMari என்ற பாடல் நல்லரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் 2 வது சிங்கில் பாடல் விரைவில் ரிலீஸாகும் எனக் கூறப்பட்ட நிலையில் வலிமை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் முடிந்தது. பின்னர் நடிகர் அஜித், ரஷ்யாவில் இருந்து பைக்கிலேயே சுமார் 5000 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செல்லவுள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில் வலிமை படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டுமெனக் கூறி அஜித் ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.