செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 12 ஜனவரி 2018 (22:18 IST)

சசிகலாவை வம்புக்கு இழுத்த சூர்யா-விக்னேஷ்சிவன்

சூர்யா, கீர்த்திசுரேஷ், நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய 'தானா சேர்ந்த கூட்டம்' இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு வசனம் சசிகலா தரப்பினர்களை அதிருப்தி அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் சூர்யாவிடம் ஒரு பெண், நாட்டில் ஊழல் இல்லாமல் இருக்க பாடுபடுவேன் என்று கூறுவதாகவும், அந்த பெண்ணின் பெயர் என்ன என்று சூர்யா கேட்க அதற்கு அவர் சசிகலா என்று கூறுவதாகவும் ஒரு காட்சி உள்ளது

ஊழல் வழக்கில் தண்டனை சென்று சிறையில் இருக்கும் சசிகலாவை குறிக்கும் விதமாகவே இந்த காட்சி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த காட்சியால் சசிகலா தரப்பினர் அதிருப்தியை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.