ரசிகர்களுடன் லோக்கல் ஆட்டம் போட்ட சூர்யா: வைரல் வீடியோ!!

Last Updated: புதன், 10 ஜனவரி 2018 (19:41 IST)
சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் படம் வரும் பொங்கல் அன்று திரைக்குவரவுள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.
பொங்கல் ரிலீசாக இதுவரை சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், விகரமின் ஸ்கெட்ச், பிரபுதேவாவின் குலேபகாவலி ஆகிய மூன்று படங்கள் 12 ஆம் தேதி வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் சூர்யா.


சமீபத்தில் கேரளா சென்று படத்தின் ப்ரமோஷன் வேலைகளை கவனித்தார். தனியாளகவே ப்ரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் சூர்யா. இந்நிலையில், இது போன்ற ப்ரமோஷனின் போது ரசிகர்களுடன் சூர்யா நடனமாடிய வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :