ராஞ்சி டி20 போட்டி: சாதனைகள் படைக்கவிருக்கும் இந்திய அணி!!


Sugapriya Prakash| Last Modified சனி, 7 அக்டோபர் 2017 (17:24 IST)
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டி20 தொடர் இன்று மாலை 7 மணிக்கு ராஞ்சியில் நடக்கவுள்ளது. இந்த போட்டியில் சில சாதனைகள் நடத்தப்படவுள்ளது. 

 
 
சில சாதனை பட்டியல் இதோ...
 
# இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா இந்த போட்டியில் களமிரங்கினால், 18 ஆண்டுகளை கடந்த 8 வது இந்திய வீரர் என்ற பெருமை பெறுவார். 
 
# இந்திய அணி சர்வதேச டி20 அரங்கில் இதுவரை 49 வெற்றிகளை பெற்றுள்ளது. இத்தொடரில் வெற்றி பெறும் பட்சத்தில் 50 வது வெற்றியை இந்திய அணி பதிவு செய்யும். 
 
# இந்திய சுழற்பந்து வீச்சாளர் சகால், இதுவரை 99 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்த போட்டியில் இவர் விளையாடினால் 100 வது டி20 போட்டியில் பங்கேற்ற வீரர்கள் பட்டியலில் இணையலாம்.
 
# டி20 அரங்கில் கோலி 99 கேட்ச்கள் பிடித்துள்ளார். இத்தொடரில் 1 கேட்ச் பிடித்தாலும் 100 கேட்ச்கள் பிடித்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமை பெறுவார். 
 
# டி20 அரங்கில் கோலி இதுவரை 6942 ரன்கள் எடுத்துள்ளார். இப்போட்டியில் கோலி இன்னும் 58 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் 7000 ரன்களை எட்டலாம். 


இதில் மேலும் படிக்கவும் :