Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

டி20 ஓவர் போட்டியை தொடர்ந்து டி10 அறிமுகம்

Last Modified: புதன், 4 அக்டோபர் 2017 (14:03 IST)

Widgets Magazine

கிரிக்கெட் போட்டிகளுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து தற்போது ஓவர் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.


 

 
கிரிக்கெட் டெஸ்ட் மற்றும் 50 ஓவர் கொண்ட ஒருநாள் போட்டிகளை விட தற்போது நடைபெறும் டி20 போட்டிகளுக்கே நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் ஒருநாள் போட்டியை விட டி20 போட்டிகளை நடத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. 
 
இந்நிலையில் தற்போது டி20 ஓவர் போட்டிகளையும் கடந்து டி10 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபரான ஷாஜி உல் முல்க் எடுத்த முயற்சிக்கு எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளது.
 
இந்த முயற்சிக்கு இலங்கை வங்கதேச கிரிக்கெட் வாரியங்களுடன் சேர்ந்து ஐசிசியும் அனுமதி வழங்கிவிட்டது. இதனால் கிரிக்கெட் விளையாடும் நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் டி10 போட்டியில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் டி20 ஐபில் போட்டிகள் நடப்பது போல் ஐக்கிய அரபு நாடுகளில் டி10 போட்டிகள் நடக்க உள்ளது. ஷார்ஜாவில் வரும் டிசம்பர் 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடக்கும் போட்டியில் ஆறு அணிகள் பங்கேற்க உள்ளன. அணிகளை தேர்வு செய்யும் பணி இந்த மாதம் நடைபெற உள்ளது.
 
இலங்கை முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி, இந்தியாவின் அதிரடி மன்னன் சேவாக் ஆகியோர் தூதர்களாக செயல்பட உள்ளனர். விரைவில் சர்வசேத அளவில் டி20 போட்டிகள் சர்வதேச அணிகளிடையே நடைபெற வாய்ப்புள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

தொடர் தோல்வி எதிரொலி: வெளியேறும் நிலையில் தமிழ் தலைவாஸ்

சச்சின் தெண்டுல்கரின் தமிழ் தலைவாஸ் அணி சொந்த மண்ணான சென்னையிலும் தொடர் தோல்வி அடைந்து ...

news

ரோகித் சர்மாவை புகழ்ந்து தள்ளிய இலங்கை முன்னாள் கேப்டன்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா அபாரமாக ...

news

முரளி விஜய்க்கு மூன்றாவது குழந்தை...

இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய் - நிகிதா தம்பதிக்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளது.

news

டி20 போட்டிகளுக்கான இந்திய - ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!!

இந்தியாவுக்கு எதிரான ஐந்து ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய ...

Widgets Magazine Widgets Magazine