ஓவியா பற்றி மனம் திறந்த பிக்பாஸ் போட்டியாளர் ரைசா

Sasikala| Last Modified வெள்ளி, 6 அக்டோபர் 2017 (11:45 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் பல பிரச்சனைகளை சந்தித்தாலும், மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. 100 நாட்களாக நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஆரவ் முதல் பரிசை வென்றார். அவருக்கு ரூ 50 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

 
இந்நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பிரபலமானதோடு மட்டும் அல்லாமல் சினிமா  வாய்ப்புகள், விளம்பர வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து பிக்பாஸ் போட்டியாளர்கள் பேட்டிகள் கொடுத்து வருகின்றனர்.
 
சமீபத்தில் ரைசா பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அப்போது அவர், நான் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது யாருடனும் பெரிதாக சண்டை போடவில்லை. ஆனால் அனைவரும் ஓவியாவை டார்க்கெட் செய்தபோது எனக்கு அவரை பார்க்க பரிதாபமாக இருந்தது, மற்றவர்கள் மீதும் கோபம் வந்தது என கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :