பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த பரிசு என்ன தெரியுமா!

Sasikala| Last Modified வியாழன், 5 அக்டோபர் 2017 (10:41 IST)
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்களும் வந்திருந்தனர். அதில் ஶ்ரீ மற்றும் நமீதா தவிர மற்ற போட்டியாளர்கள் அனைவரும்  கலந்துகொண்டனர்.

 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றியாளர் என அரிவிக்கப்பட்ட நிலையில், கமல் எல்லோரையும் மேடைக்கு அழைத்துப் பேசிய அவர்களுடன் ஆடவும் செய்தார். போட்டியாளர்கள் அனைவருக்கும் கமல்ஹாசன் மேடையில் ஒரு பரிசு கொடுத்தார்.  அந்தப் பரிசு என்னவாக இருக்கும் என ரசிகர்கள் ட்விட்டரில் கேட்டு வந்தனர்.

 
 
இந்நிலையில் அது என்ன என்பதை பிக்பாஸ் போட்டியாளரும் நடிகையுமான காஜல் பசுபதி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.  சப்னா புக் ஹவுஸ் மூலம் சமீபத்தில் வெளியான கமலின் 'ஹேராம்' படத்தின் திரைக்கதை, ஜெயகாந்தனின் 'ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்' ஆகிய புத்தகங்களில் கமல் தன் கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளார். ரிவர்ஸ் ('Rivers') குறுந்தகடு ஒன்றையும்  கொடுத்துள்ளார்.
இதில் மேலும் படிக்கவும் :