செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2017 (23:41 IST)

சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது சேப்பாக் சூப்பர் கில்லிஸ்

கடந்த சில நாட்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டிகளின் கிளைமாக்ஸ் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டித்தொடரின் சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும் இறுதிப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியுடன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி மோதியது



 
 
முதலில் பேட்டிங் செய்த தூத்துக்குடி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 143 ரன்கள் எடுத்தது. 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 145 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்த ஆண்டின் சாம்பியன் பட்டத்தை சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி பெற்றுள்ளது
 
கடைசி 12 பந்துகளில் 22 ரன்கள் வெற்றி என்ற கடினமான இலக்கு இருந்த நிலையில் 19வது ஓவரை வீசிய வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சை சரவணன் துவம்சம் செய்து இரண்டு சிக்சர்களும், ஒரு பவுண்டரியும் அடித்து வெற்றிக்கு காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது