செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (23:48 IST)

இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது சேப்பாக் கில்லிஸ் அணி

தமிழ்நாடு பிரிமியர் கிரிக்கெட் போட்டி கிளைமாக்ஸ் கட்டத்திற்கு வந்துள்ளது. தூத்துக்குடி அணி ஏற்கனவே இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் அந்த அணியுடன் மோதும் அணி என்பதை தீர்மானிக்கும் போட்டி இன்று நெல்லையில் கோவை மற்றும் சேப்பாக் அணிகளுக்கு இடையே நடைபெற்றது



 
 
முதலில் பேட்டிங் செய்த கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 136 ரன்கள் எடுத்தது. 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய சேப்பாக் அணி ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 11 ஓவர்களில் 90 ரன்கள் எடுத்தது
 
வெற்றி பெற இன்னும் 54 பந்துகளில் 47 ரன்களே தேவை என்ற நிலையில் மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் டக்வொர்த் லீவீஸ் முறைப்படி சேப்பாக் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கோவை அணி கடும் வருத்தத்துடன் வெளியேறியது. இந்த வெற்றியால் வரும் ஞாயிறு அன்று தூத்துக்குடி அணியும் சேப்பாக் அணியும் இறுதிப்போட்டியில் மோதுகின்றன