வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Senthil Vela
Last Updated : சனி, 27 ஏப்ரல் 2024 (15:04 IST)

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

Yuvaraj Singh
நடப்பு 20 ஓவர் உலக கோப்பை தொடருக்கான தூதராக யுவராஜ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். உலகின் சிறந்த வீரர்கள் புதிய மைதானத்தில் பங்கேற்பதை காண்பது தனக்கு கிடைத்த கவுரவமாக நினைப்பதாகக் கூறினார். 
 
டி-20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் ஒன்றாம் தேதி தொடங்குகிறது. இந்த முறை டி-20 உலகக் கோப்பை தொடர் மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த தொடரை பிரபலப்படுத்தும் நோக்கில் மேற்கு இந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ல், ஜமைக்காவை சேர்ந்த அதிவேக ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் ஆகியோரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தூதராக நியமனம் செய்திருந்தது.
 
இந்நிலையில் முதல் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர் அடித்து சாதனை படைத்த யுவராஜ் சிங், நடப்பு 20 ஓவர் உலக கோப்பை தொடருக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். 

 
இதுகுறித்து பேசிய யுவராஜ் சிங், உலகின் சிறந்த வீரர்கள் புதிய மைதானத்தில் பங்கேற்பதை காண்பது தனக்கு கிடைத்த கவுரவமாக நினைப்பதாகக் கூறினார். மேலும், நியூயார்க்கில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி இந்த ஆண்டின் மிகப் பெரிய போட்டியாக அமையும் என்றும் யுவராஜ் சிங் தெரிவித்தார்.