புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 9 டிசம்பர் 2021 (13:48 IST)

13 பேர் உடல்களை கொண்டு செல்லும்போது மீண்டும் விபத்து! – நீலகிரியில் அதிர்ச்சி!

ஹெலிகாப்டர் விபத்தில் இறந்து 13 பேரின் சடலங்கள் கொண்டு செல்லப்படும்போது போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது உடலுக்கு உரிய மரியாதை செய்யப்பட்டு தற்போது அவை ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலமாக சூலூர் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இந்நிலையில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு பாதுகாப்பாக போலீஸ் வாகனங்களும் சென்றன. அப்போது பர்லியாறு அருகே சென்றுக் கொண்டிருந்தபோது பாதுகாப்புக்கு சென்ற போலீஸ் வாகனம் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் காவலர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். எனினும் இந்த விபத்தால் உடல்களை கொண்டு செல்லும் பணி தாமதப்படவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளது.