செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 9 டிசம்பர் 2021 (11:48 IST)

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து; நாடாளுமன்ற அவைகளில் இரங்கல்!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு நாடாளுமன்ற இரு அவைகளிலும் இரங்கல் அனுசரிக்கப்பட்டது.

நேற்று நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு மாநில முதலமைச்சர்கள், கட்சி தலைவர்கள், பிறநாட்டு தலைவர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இன்று கூட்டத்தொடர் தொடங்கும் முன்பாக இரு அவைகளிலும் குன்னூர் விபத்தில் இறந்த 13 பேருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், மாநிலங்களவையில் அவைத் துணைத் தலைவர் ஹர்வன் சிங்கும் இரங்கல் செய்தியை வாசித்தனர்.