1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 22 ஜூன் 2018 (11:38 IST)

ஓ.என்.ஜி.சி. குழாய் உடைந்து வயல்களில் கச்சா எண்ணெய் - பரிதவிக்கும் விவசாயிகள்

நாகையில் ஓ.என்.ஜி.சி. குழாய் வெடித்து வயல்களில் கச்சா எண்ணெய் வெளியேறிய சம்பவம் விவசாயிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களின் கடும் எதிர்ப்புகளையும் மீறி நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பாண்டூர் கிராமத்தில் ஓஎன்ஜிசி விவசாயிகளின் விளைநிலங்களில் கச்சா எண்ணெய் குழாய்கள் சுமார் 3 அடி ஆழத்தில் பதிக்கப்பட்டுள்ளன. பாண்டூர் மற்றும் பொன்னூர் கிராமங்களில் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய் குழாய்கள் மூலம் குத்தாலத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.  
 
இந்நிலையில்  நேற்று பாண்டூர் கிராமத்தில் புதைக்கப்பட்ட எண்ணெய் குழாய் திடீரென வெடித்து, அதிலிருந்து கச்சா எண்ணெய் வெளியேறியது. இதைக்கண்ட அந்த நிலத்தின் உரிமையாளர் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தார்.
 
சம்பவ இடத்திற்கு வந்த ஓ.என்.ஜி.சி. ஊழியர்கள் உடைப்பு ஏற்பட்ட குழாயின் வால்வை அடைத்தனர். கச்சா எண்ணெய் விளைநிலத்தில் புகுந்ததால் அப்பகுதி விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.