பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு இதுதான் காரணம்; மத்திய அமைச்சர்
சர்வேதச சந்தை நிலவரத்திற்கேற்ப விலைகள் மாற்றப்படுவதே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் கடந்த சில மாதங்களாக அதிகப்படியான விலையை எட்டியுள்ளது. எரிபொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எண்ணெய் நிறுவனங்கள் விலையை தினசரி மாற்றி அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிடம் இருந்து வாங்கி விற்கும் மற்ற நாடுகளில் இந்தியாவை விட பெட்ரோல், டீசல் விலை குறைவாக உள்ளது என்பதால் பலரும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:-
கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் உற்பத்தியை குறைத்துக் கொண்டதால் சர்வேதச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதுதான் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம்.
இதற்கு உரிய தீர்வு காண மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. விரைவில் இந்த விலை உயர்வுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.