புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 11 மே 2018 (16:06 IST)

திடீரென உடைந்த அணையால் 41 பேர் பலி: 100க்கும் அதிகமானோர்கள் கதி என்ன?

கென்யா நாட்டில் உள்ள மிகப்பெரிய அணை ஒன்று திடீரென உடைந்ததால் அதிலிருந்து வெளியேறிய தண்ணீரால் இதுவரை 41 பேர் பலியாகியுள்ளனர். மேலும் நூற்றுக்கும் அதிகமானோர்களை காணவில்லை என்பதால் அவர்களுடைய கதி என்ன? என்ற அச்சம் பரவி வருகிறது.
 
கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் இருந்து 190 கிமீ தூரத்தில் உள்ள சோலை என்ற கிராமம் அருகே ஒரு மிகப்பெரிய அணை உள்ளது. இந்த அணை நேற்றிரவு திடீரென உடைந்ததால் அதில் இருந்து வெளிவந்த தண்ணீர் ஊருக்குள் புகுந்து பலரின் மரணத்திற்கு காரணமாகியுள்ளது. இதுவரை 41 சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், மீட்புப்பணி முடிந்தவுடன் தான் இன்னும் எத்தனை பேர் பலியாகியுள்ளனர் என்பது தெரியவரும் என்றும் கூறப்படுகிறாது.
 
அதுமட்டுமின்றி விவசாய நிலங்கள் அதிகம் இருக்கும் பகுதி இது என்பதால் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நாசமாகியுள்ளதாகவும், இதனால் விவசாயிகள் மிகப்பெரிய பொருளாதார இழப்புக்கு ஆளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
அணை உடைந்ததால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக சுமார் 2000 பேர் தங்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும், இவர்கள் அனைவரையும் கென்யா அரசு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளதாகவும், அந்நாட்டின் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது