செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (10:58 IST)

900 கோடி முதலீடுகள்; எத்தனை நிறுவனங்கள்..? எவ்வளவு வேலைவாய்ப்புகள்? - விரிவான தகவல்!

Stalin

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள நிலையில் ரூ.900 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

 

அதன்படி, மொத்தம் 6 நிறுவனங்களுடன் ரூ.900 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்தாகியுள்ளது. சிறுசேரியில் உள்ள சிப்காட்டீல் ரூ.450 கோடியில் நெட்வொர்க் சோதனை வசதிக் கொண்ட புதிய ஆராய்ச்சி மையம் அமைக்க ஹெச்.எம்.டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் 100 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

 

அதுபோல பேபால் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவுக்கான மேம்பாட்டு மையம் அமைக்கும் ஒப்பந்தத்தின் வாயிலாக சென்னையில் 1000 வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

 

கோவை மாவட்டம் சூலூரில் ரூ.150 கோடி செலவில் செமி கண்டக்டர் ஆலை அமைக்க ஈல்ட் இஞ்சினியரிங் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் 300 பேருக்கு வேலை கிடைக்கும்.
 

 

மேலும் சென்னையில் ரூ.250 கோடி முதலீட்டில் மைக்ரோசிப் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட உள்ள ஆலையால் 1500 பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள். மதுரை எல்காட்டில் 700 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ரூ.50 கோடி முதலீட்டில் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய விநியோக மையம் அமைக்க இன்பிக்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 

 

இதுதவிர சென்னை தரமணியில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் செம்கண்டக்டர் ஆலை, செயற்கை நுண்ணறிவு தொழில் மேம்பாட்டு மையம் அமைக்க அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

 

Edit by Prasanth.K