வியாழன், 17 ஏப்ரல் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 11 ஏப்ரல் 2025 (17:43 IST)

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

கோப்புப்படம்
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள ஏத்தாப்பூர் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
 
அங்கு வசித்து வரும் 17 வயது பிளஸ் டூ படிக்கும் மாணவிக்கு ஆசை வார்த்தை கூறிய 60 வயது பழனிச்சாமி என்ற நபர், அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக, மாணவி கர்ப்பமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட,அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தையை அரசு வசம் ஒப்படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இந்த நிலையில் மாணவிக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் இந்த விஷயத்தை காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, மாணவியின் கர்ப்பத்திற்கு 60 வயது பழனிச்சாமியே காரணம் என்பது தெரிய வந்தது.
 
இதையடுத்து, பழனிச்சாமியை காவல்துறையினர் கைது செய்து, பொக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
17 வயது மாணவியை 60 வயது நபர் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆக்கிய சம்பவம், அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran