வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (18:51 IST)

ரஜினி பற்ற வைத்த காட்டுத்தீயை எளிதாக அனைத்து விட முடியாது - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேச்சு...

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பனிமனை முன்பு அதிமுக உசிலம்பட்டி நகர் கழக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்து கொண்டு உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார்.
 
இந்நிகழ்வில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்...
 
அதிமுகவிற்கு காலம் கனிந்து வந்து கொண்டிருக்கிறது., அதுதான் இன்று நாணய வெளியிடு, இன்று உட்சபட்ட குழம்பம், இன்றைக்கு ஜூனியர் சீனியர் சண்டை திமுகவில் தொடங்கி விட்டது. இது பிள்ளையார் சுளி.
 
நடிகர் ரஜினிகாந்த் சத்தமில்லாமல் ஒரு நெருப்பை பற்ற வைத்துள்ளார், சீனியர் ஜூனியர் என்ற பகை உணர்ச்சியை. ஆகவே நகைச்சுவையை பகைச்சுவையாக மாற்ற வேண்டாம் என நீங்கள் அடுக்கு மொழியில் பேசினாலும் பற்ற வைத்த நெருப்பு இன்று எரிமலையாக புகைந்து கொண்டிருக்கிறது எப்போது வெடிக்குமோ என்று தமிழ்நாடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேலையில் அதை அணைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
 
வைரமுத்து கூட முயற்சி செய்கிறார், முதல்வரும் முயற்சி செய்கிறார். சம்மந்தப்பட்ட இருவரும் முயற்சி செய்கிறார்கள் ஆனால் பற்ற வைத்த காட்டுத்தீயை எளிதாக அனைத்து விட முடியாது.அது திமுகவினரின் மனதில் அனலாக கொளுந்து விட்டு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது எது எப்போது வெடிக்குமோ அது ஆண்டவனுக்கு தான் தெரியும்.
 
காலம் அதிமுகவிற்காக கனிந்து வந்து கொண்டிருக்கிறது., நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூட எடப்பாடி பழனிச்சாமியை பாராட்டியுள்ளார்.
 
சுட்டுக் கொல்லப்படுகிற மீனவர்களை காக்க தவறிய, கட்சதீவை மீட்க தவறிய, 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு ஒத்த பைசா நிதி வாங்க யோக்கியதை இல்லாத முதலமைச்சர் அமெரிக்கா பயணம் போய் என்ன கிழிக்க போகிறார் என்று தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள்.
 
டெல்லி சென்று நிதியை பெற முடியாத முதலமைச்சர், இன்று கோர்ட் சூட் மாட்டிக் கொண்டு அமெரிக்கா செல்கிறார்., கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போன கதையாக உள்ளது.
 
ஏற்கனவே ஐப்பான், சிங்கப்பூர், துபாய்-க்கு சென்றீர்கள் ஆனால் எந்த நிதியும் பெற்றதாக தெரியவில்லை வெற்று அறிக்கை மட்டுமே வெளியிட்டுள்ளீர்கள். 
 
அமெரிக்காவில் போய் நிதி வாங்குவது இரண்டாவதாக இருக்கட்டும்
டெல்லியில் நிதியை வாங்க யோக்கிதை இல்லை என புறக்கணிக்கப்பட்ட நீங்கள், கருணாநிதி நாணய வெளியிட்டு விழாவை மத்திய அரசு நடத்தியது என முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்றீர்கள்.
 
அனுபவம் குறித்து பேசுகிறார்கள் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் என அண்ணாமலை பேசுகிறார்.ஐபிஎஸ் எவ்வளவு கஷ்டப்பட்டு படித்தேன் என்கிறார் மற்றவர்கள் எல்லாம் பிட் அடித்தா பாஸ் செய்தார்களா.
 
உசிலம்பட்டி மண்ணிலிருந்து சவால் விடுகிறேன், மாணவர், கல்லூரி காலத்தில் பொது வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால், மாணவராக இருந்திருந்த போது ஏதாவது போராட்டம் நடத்தி இருந்தால் ஏற்றிருப்பார்கள்.
 
ஐபிஎஸ் படித்தாரா இல்லையா என தெரியவில்லை, நாளை முதல் அதிமுகவிற்கு சுதந்திரம் கிடைத்துவிடும் என நினைக்கிறேன், லண்டன் செல்கிறாராம் படிப்பதற்கு இதுவரை படிக்காத முட்டாளாக தான் தமிழ்நாட்டை பாடாய் படுத்தினார் போல இனிமேல் தான் படிக்க போகிறார் 
என்று பேசினார்.