புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 9 டிசம்பர் 2017 (12:37 IST)

தன்னை கொல்வதற்கு பாகிஸ்தான் கூலிப்படையை அமர்த்தினார்; மணிசங்கர் அய்யர் மீது மோடி பகீர் குற்றச்சாட்டு!!

மணிசங்கர் அய்யர் என்னைக் கொல்ல பாகிஸ்தான் கூலிப்படையை ஏற்பாடு செய்தார் என இந்திய பிரதமர் மோடி கூறியுள்ளார். 
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர் குஜராத் சட்டசபை தேர்தல்  பிரச்சாரத்தின் போது  பிரதமர் மோடியை  தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்ததால் கட்சி மேலிடம் அவரை தற்காலிக நீக்கம் செய்தது. இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் குஜராத்தின் உள்ள பாபர் என்ற இடத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மோடி, தன்னை பற்றி அவதூறாக பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் மீது அடுக்கடுகளாக குற்றச்சாட்டுகளை வைத்தார். தரக்குறைவாக பேசிய மணிசங்கர அய்யரை, குஜராத் மக்கள் பார்த்துக்கொள்வார்கள் என்றும் இதற்கான பலனை காங்கிரஸ், வரும் 18-ந் தேதி சட்டசபை தேர்தலின் முடிவில் தெரிந்து கொள்வார்கள் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
 
மேலும் தான் பிரதமராக பதவி ஏற்ற பிறகு, மணிசங்கர் அய்யர் பாகிஸ்தானுக்கு சென்று, பாகி்ஸ்தானியர்களிடம் மோடி இருக்கும் வரை, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவில் முன்னேற்றம் ஏற்படாது என கூறி தன்னை கொல்வதற்கு பாகிஸ்தான் கூலிப்படையை அமர்த்தினார் என்று மோடி குற்றம்சாட்டினார். இதற்காக மக்கள் கவலைப்படவேண்டாம் என்றும் தன்னை தெய்வம் காத்துக்கொண்டிருப்பதாகவும் மோடி கூறினார்.