1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (14:26 IST)

ஆத்திரத்தில் பாம்பின் தலையை கடித்து மென்று துப்பிய விவசாயி

உத்தரபிரதேசத்தில் விவசாயி ஒருவர் தன்னை கடித்த பாம்பின் தலையை கடித்து மென்று துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
உத்தரபிரதேச மாநிலம் சுக்லாபூர் பாகர் கிராமத்தைச் சேர்ந்த சோனேலால் என்பவர் தனது தோட்டத்தில் மயக்க நிலையில் கிடந்துள்ளார். அவரது அருகில் பாம்பின் உடலும் கிடந்துள்ளது. இதை பார்த்த அக்கம்பக்கதினர் சோனேலாலை பாம்பு கடித்துவிட்டது என நினைத்து ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
 
மருத்துவமனையில் மருத்துவர்கள் சோதனை செய்ததில் அவரது உடலில் பாம்பு கடித்த தடயம் எதுவும் இல்லாமல் இருந்துள்ளது. பின்னர் அவருக்கு விஷ முறிவு மருத்து கொடுத்து அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். கண்விழித்த சோனேலால் நடந்த சம்பவம் பற்றி கூறியது மருத்துவர்களை அதிர்ச்சியடைய செய்தது. அவர் கூறியதாவது:-
 
நான் கால்நடைகளை அழைத்துக்கொண்டு என் தோட்டத்துக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு பாம்பு என்னை கடித்துவிட்டது. இதனால் ஆத்திரத்தில் அந்த பாம்பை பிடித்து அதன் தலையை மென்று துப்பிவிட்டேன் என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்துள்ளது.