Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இப்ப ஒரு பயலும் கண் வைக்க மாட்டான் - விவசாயியின் பலே ஐடியா

Last Updated: புதன், 14 பிப்ரவரி 2018 (10:12 IST)
ஆந்திர விவசாயி ஒருவர் தன்னுடைய வயலுக்கு அருகில் பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் போஸ்டரை வைத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 
மழை இல்லாத காரணத்தினால் இந்தியாவில், குறிப்பாக  தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் விவசாயம் அழிந்து கொண்டே இருக்கிறது. மேலும்., விவசாய நிலங்கள் அடுக்கு மாடி கட்டிடங்களாக மாறி வருகிறது.
 
இந்நிலையில், ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் அன்கினாபள்ளி என்ற பகுதியில் வசிக்கும் செஞ்சு ரெட்டி என்ற விவசாயியின் 10 ஏக்கர் வயலில் அவர் பதியம் போட்ட முட்டைக்கோஸ், காலி ஃபிளவர், ஓக்ரா மற்று மிளகாய் ஆகியவை நல்ல விளைச்சலை கொடுத்துள்ளது. அதை அந்தப்பக்கம் வரும் யாரும் கண் வைக்கக் கூடாது என அவர் செய்த காரியம்தான் ஹைலைட். வயலுக்கு அருகில் கவர்ச்சி நடிகை சன்னிலியோனின் கவர்ச்சியான பேனரை வைத்து விட்டார். மேலும் ‘என்னைப் பார்த்து அழுவாதே’ என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. 
 
பிறகென்ன.. அந்தப் பக்கம் வருபவர்களெல்லாம், சன்னிலியோனை மட்டும் பார்த்துவிட்டு பெருமுச்சு விட்டு விட்டு நகர்ந்து விடுகிறார்களாம். அவரின் பயிர் மீது யார் கண்ணும் படவில்லையாம். என்ன ஒரு ஐடியா?!
 
இந்த கில்லாடி விவசாயிக்கு தோன்றிய ஐடியாவை நிச்சயம் நாம் பாராட்டத்தான் வேண்டும்.


இதில் மேலும் படிக்கவும் :