செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (04:00 IST)

நடுத்தர வர்க்கத்தை பாராமுகமாக கொண்ட பட்ஜெட்: கமல்ஹாசன்

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி நேற்று பாராளுமன்றத்தில் பொது மற்றும் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் நடுத்தர மக்களை கண்டுகொள்ளாத பட்ஜெட் என்ற விமர்சனம் எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இருந்து வரும் நிலையில் சற்றுமுன் கமல்ஹாசன் இந்த பட்ஜெட் குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டை நான் புரிந்து கொண்ட வரையில் அவர்களின் கடைக்கண் பார்வை விவசாயிகள் பக்கமும், கிராமத்தின் பக்கமும் சற்றே திரும்பி இருக்கிறது என்றும், மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படுவது பல வருடங்களாக நடந்து வரும் சோகம் பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தை பொருத்தமட்டில் பாராமுகமாக இருப்பதாகத் தான் நான் கருதுகிறேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் போக்குவரத்து ஊழியர்களின் சம்பளப்பிடித்தம் குறித்து அவர் குறிப்பிட்டபோது, 'போக்குவரத்து ஊழியர்களின் 7 நாள் ஊதியத்தை தமிழக அரசு பிடித்தம் செய்தது முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்று கூறியுள்ளார்