1. இதர வாசிப்பு
  2. »
  3. அறுசுவை
  4. »
  5. சைவம்

பருப்பு உருண்டை குழம்பு

பருப்பு உருண்டை குழம்பு
தேவையான பொருட்கள

துவரம் பருப்பு - 150 கிராம் ( ஊற வைத்துக
கொள்ளவும் )

உப்பு - தேவையான அளவ

மிளகாய் வற்றல் - 8

நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன

கடுகு - 11/2 டீஸ்பூன

பச்சை மிளகாய் - 2 ( நறுக்கியது )

வெங்காயம் - 2 ( பொடியாக நறுக்கியது )

அரிசி மாவு - 1 டீஸ்பூன

கொத்தமல்லி கறிவேப்பிலை - பொடியாக நறுக்கியத

புளி - ஒரு பெரிய எலுமிச்சம் பழ அளவ
( ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைக்கவும். )

சாம்பார் பொடி - 21/2 டீஸ்பூன

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன

செய்முற

1. துவரம் பருப்பை நன்றாக ஊறிய பின் களைந்து, வடிய வைத்து, தேவையான உப்பு, மிளகாய் வற்றல் போட்டு, சற்று கரகரப்பாகவும், கெட்டியாகவும் அரைத்துக் கொள்ளவும்.

2. நல்லெண்ணெயில் கடுகு தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.

3. வெங்காயம் வதங்கியவுடன் அரைத்த பருப்பை போட்டு, வெந்து நிறம் மாறியவுடன் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.

4. வதங்கிய பருப்பு மாவில் ஒரு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

5. புளியை 3 டம்ளர் தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.

6. கடுகு தாளித்து, புளி தண்ணீரில், உப்பு, மஞ்சள் பொடி, சாம்பார் பொடி போட்டு கொதிக்க விடவும்.

7. குழம்பு சேர்ந்து கொதிக்கும் போது, பருப்புருண்டைகளை போட்டு, அடுப்பை குறைத்து எரிய விடவும்.

8. பருப்புருண்டை உடையாதவாறு கிளறி இறக்கவும்.
About Writer
Webdunia