முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > அறுசுவை > சைவம்
 
காளான் குழம்பு
Webdunia
தேவையான பொருட்கள் :

காளான் 200 கிராம்

மிளகு 25 கிராம்

ஏலக்காய் 5

பட்டை சிறிய துண்டு

கிராம்பு 4

பூண்டு 1

தேங்காய் 1 (துருவியது)

தக்காளி 4

பெரிய வெங்காயம் 2

கறிவேப்பிலை சிறிதளவு

மல்லித்தூள் 1 தேக்கரண்டி

மிளகாய்த் தூள் 2 தேக்கரண்டி

உப்பு தேவையான அளவ


செய்முறை :

மிளகு, ஏலக்காய், பட்டை, கிராம்பு, பூண்டு ஆகியவற்றை அரைக்கவும். தேங்காய் துருவலை அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.

காளானை கழுவி அதை இரண்டு இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின்பு தக்காளியையும், வெங்காயத்தையும் பொடியாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கறிவேப்பிலை, காளான், முதலில் அரைத்து வைத்திருக்கும் மசாலாத்தூள் ஆகியவற்றையுப் போட்டு நன்றாக வதக்கவும்.

பிறகு அத்துடன் வெங்காயம், தக்காளியையும் சேர்த்துக் கிளர வேண்டும். தேங்காய்ப் பாலையும் அத்துடன் விட்டுக் கலக்கவும். இறுதியில் மல்லித்தூள், மிளகாயத் தூள் அதில் உப்பும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
மேலும்
பச்சை மிளகாய் குழம்பு
ஓலன்
சுண்டக்காய் வற்றல் குழம்பு
கறிவேப்பிலைக் குழம்பு
கொள்ளுரசம்
தக்காளி ரசம்