(Gottu Rasam)
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு தனியா-1/4 கப் காய்ந்த மிளகாய்-6 பெருங்காயம்-1/2 டீஸ்பூன் கடுகு-1/2 டீஸ்பூன் புளி-ஒரு எலுமிச்சை அளவு எண்ணெய்-2 மேஜைக் கரண்டி நறுக்கிய கொத்தமல்லி-1/2 கட்டு உப்பு-சுவைக்கேற்ப
செய்முறை:
அடுப்பில் பாத்திரத்தை (சட்டியை) வைத்து, எண்ணெய் காய்ந்ததும் துவரம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். அதில் தனியா, காய்ந்த மிளகாய் போட்டு வறுக்கவும்.
இத்துடன் பெருங்காயப் பொடியைப் போட்டு, உப்பு மற்றும் புளித்தண்ணீரை விட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும்.
ரசம் கொதித்து வற்றியவுடன் மீண்டும் தேவையான அளவுத் தண்ணீரைச் சேர்த்து, ஒரு கொதி வந்தவுடன் நறுக்கிய கொத்துமல்லித் தழையைத் தூவவும். நெய்யில் கடுகு தாளித்துப் பரிமாறவும்.
|