(Pineapple Rasam)
தேவையான பொருட்கள்:
பைனாப்பிள் துண்டுகள்-2 கப் புளி-ஒரு எலுமிச்சை அளவு ரசப்பொடி-4 டீஸ்பூன் எண்ணெய் விடாமல் வறுத்துப் பொடித்த துவரம் பருப்பு, மிளகு, சீரகம்-தலா 2 டீஸ்பூன் வெந்த துவரம் பருப்பு-2 கப் உப்பு-தேவையான அளவு
செய்முறை:
புளிக் கரைசலில், உப்பு, ரசப்பொடி, மிளகு, சீரகப்பொடி இவைகளைச் சேர்த்துக் கொதிக்க விடவும். புளி மற்றும் ரசப் பொடி வாசனை போகக் கொதித்ததும், வெந்த துவரம் பருப்பை தேவையான அளவுத் தண்ணீரில் கரைத்து கொதிக்கும் ரசத்தில் விடவும்.
ரசம் ஒரு கொதி வந்தவுடன் கீழே இறக்கி, பைனாப்பிள் துண்டுகளைப் போட்டு, சிறிது நேரம் கழித்துப் பரிமாறவும்.
|