Mysore Rasam
தேவையான பொருட்கள்:
வெந்த துவரம் பருப்பு-1/4 கப் தனியா-1/4 கப் துவரம் பருப்பு-1/4 கப் மிளகு-11/2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய்-6 புளி-ஒரு எலுமிச்சை அளவு நெய்-1 டீஸ்பூன் கடுகு-1 டீஸ்பூன் எண்ணெய்-தேவையான அளவு நறுக்கிய கொத்தமல்லித்தழை-சிறிதளவு நறுக்கிய தக்காளி-2 உப்பு-சுவைக்கேற்ப
செய்முறை:
வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் மிளகு, தனியா, மிளகாய், துவரம் பருப்பு ஆகியவைகளைத் தனித்தனியாக வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை புளிக் கரைசல், தக்காளி மற்றும் உப்பு ஆகியவற்றுடன் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். வெந்த துவரம் பருப்பை தண்ணீர் விட்டு கரைத்து ரசத்தில் விடவும். ரசம் பொங்கி நுரைத்து வரும் போது, கீழே இறக்கி வைக்கவும். நெய்யில் கடுகு தாளித்துப் போட்டு, கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.
|