வெள்ளைப் பூசணி அல்வா

சனி, 7 நவம்பர் 2009( 16:03 IST )
தேவையான பொருட்கள்
வெள்ளைப் பூசணி - 1/4 கிலோ
சர்க்கரை - 1 கப்
நெய் - 1/2 கப்
ஏலப்பொடி - 1/4 ஸ்பூன்
முந்திரி - 10 பருப்பு
செய்முறை
முதலில் பூசணிக்காயை பட்டை சீவி, வெள்ளைப் பாகத்தை துருவியில் துருவி ஒரு கப் எடுத்து குக்கரில் சிறிது நேரம் வேக வையுங்கள்.
இப்போது இது வெந்து மிருதுவாக இருக்கும். அப்படியே அடுப்பில் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கரையுங்கள்.
பிறகு நெய்யைச் சேர்த்துக் கிளறி, கடைசியாக கலரும் சேர்த்து கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது இறக்கி வையுங்கள்.
கடைசியாக ஏலப்பொடி, நெய்யில் வறுத்த முந்திரி அல்லது நிலக்கடலைப் பருப்பு போட்டுக் கிறளவும்.
இந்தப் பூசணி அல்வா மிகச் சுவையாக இருக்கும்.