வேர்க்கடலை பர்ஃபி உடலுக்கு மிகவும் சிறந்தது. இதனை வீட்டிலேயே சுகாதாரமாக செய்து சாப்பிட்டால் இன்னும் சிறந்ததுதானே.
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியவை
வேர்க்கடலை - 100 கிராம் வெல்லம் - 200 கிராம் நெய் - 2 தேக்கரண்டி தண்ணீர் - ஒரு மேஜைக்கரண்டி
செய்யும் முறை
வேர்க்கடலையை லேசாக வறுத்து, தோலை நீக்கி, இரண்டு பாகமாக உடைத்து சுத்தும் செய்து கொளள வேண்டும்.
ஒரு வாய் அகண்ட பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் வெல்லத்தைப் போட்டுக் கொதிக்கவிட வேண்டும்.
வெல்லம் நன்கு பாகு பதத்திற்கு ஆனதும், அதில் வேர்க்கடலையைக் கொட்டி இரண்டு நிமிடம் வேக விட்டு இறக்கிவிடவும்.
நெய் தடவிய ட்ரே அல்லது தட்டில் பர்ஃபி பாகைக் கொட்டி, ஒரே சீராக பரப்பி விடவும். லேசாக ஆறியதும் உங்களுக்குத் தேவையான வடிவங்களில் துண்டு போட்டுக் கொள்ளுங்கள்.
அலங்கரிக்க
தேங்காயைத் துருவி வைத்துக் கொள்ளுங்கள்.
சிறிய கிண்ணத்தில் இரண்டு கரண்டி தண்ணீர் விட்டு அதில் கேசரி பவுடர் போட்டு கலக்கவும். இந்த தண்ணீரில் தேங்காய் துருவல்களைப் போட்டு எடுத்து ஆற விட்டு பர்ஃபியின் மீது தூவிப் பாருங்கள்.
|