முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > அறுசுவை > இனிப்புகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மாம்பழ அல்வா  Search similar articles
த‌ற்போதுதா‌ன் மா‌ம்பழ ‌சீசனா‌ச்சே... மா‌ம்பழ‌மே அ‌திக ரு‌சியானதுதா‌ன். அதனை அ‌ல்வா செ‌ய்து சா‌ப்‌பி‌ட்டா‌ல்... ‌எ‌ன்ன சொ‌ல்லு‌ம் போதே நா‌வி‌ல் எ‌ச்‌சி‌ல் ஊறு‌கிறதா... செ‌ய்து பாரு‌ங்க‌ள்.

எடு‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டியவை

பழு‌த்த சுவையான மா‌ம்பழ‌ம் - 2
சர்க்கரை - 1 கப்
பால் - 2 கப்
ஏல‌க்கா‌ய் - 2
நெய் - 1 தே‌க்கர‌ண்டி

செ‌ய்யு‌ம் முறை

mango
webdunia photoWD
மாம்பழத்‌தி‌ன் தோலை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு துண்டுகளாக‌ப் போ‌‌ட்டு அதனை நன்றாக மசித்துக் கொள்ளவும்.

சு‌த்தமான வா‌ய் அக‌ண்ட பாத்திரத்தில் ம‌சி‌த்த மா‌ம்பழ‌‌த்துட‌ன் சர்க்கரை, பால் கலந்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கிளறுங்கள்.

கலவை பதமாக ஒட்டாமல் வரும் போது நெய் சே‌ர்‌க்கவு‌ம்.

ஏல‌க்கா‌யை ‌சி‌றிது ச‌ர்‌க்கரையுட‌ன் சே‌ர்‌த்து ‌மி‌க்‌சி‌யி‌ல் அரை‌த்து சே‌ர்‌க்கவு‌ம்.

பா‌த்‌திர‌த்‌தி‌ல் தளதளவெ‌ன்று அ‌‌ல்வா வ‌ந்தது‌ம், ‌சி‌றிது நெய் தடவிய த‌ட்டு அ‌ல்லது ‌‌‌ட்ரே‌யி‌ல் அ‌ல்வாவை ஊற்றி நன்கு ஆறிய பின்னர் துண்டுகளாக வெட்டிப் பரிமாறவும்.

உ‌ங்களு‌க்கு ‌வேறு ‌நிற‌ங்க‌ள் வே‌ண்டுமெ‌ன்றா‌ல் மா‌ம்பழ‌‌ம், ச‌ர்‌க்கரை, பா‌ல் கலவையுட‌ன் ‌‌நிற‌ப் பொடியை ‌சி‌றிது த‌ண்‌ணீ‌‌ரி‌ல் கல‌ந்து சே‌ர்‌த்து‌‌க் கொ‌ள்ளலா‌ம்.

உ‌ங்களு‌க்கு‌ப் ‌பிடி‌த்த‌ நிற‌த்‌தி‌ல் மா‌ம்பழ அ‌ல்வா தயா‌ர்
மேலும்
வாழைப்பழ கேக்
மாம்பழ ஐஸ்
நெய் பிஸ்கெட்
‌சி‌த்‌திரை‌க்கான பாஸந்தி
கோடை‌க்கே‌ற்ற பயத்தம் பருப்பு லட்டு
பூசணிக்காய் அல்வா