நெய் பிஸ்கெட்
பிஸ்கெட் என்றாலே கடையில் வாங்கும் ஒரு உணவு பொருள் என்பதை மாற்றி, நெய் பிஸ்கெட்டை வீட்டில் செய்து பாருங்கள். உங்கள் குழந்தைகளுக்கும், உறவினர்களுக்கும் அளித்து பாராட்டுப் பெறுங்கள்.
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியவை
மைதா மாவு - 200 கிராம்
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
சர்க்கரைப்பவுடர் - 1/2 கப்
நெய் - 1/2 கப்
செய்யும் முறை
மைதா மாவில் பேக்கிங் பவுடரை கலந்து சலித்து எடுத்துக் கொள்ளவும்.
இதில் சர்க்கரைப் பொடியையும் சேர்த்து கலக்கவும். பின்னர் நெய்யை உருக்கி சேர்த்துக் கொள்ளவும்.
இந்த மாவை பூரிக்கு உருட்டுவது போல் சிறு உருண்டைகளாக உருட்டி வட்டவடிவமாக தட்டிக் கொள்ளவும்.
நெய் தடவிய தட்டில் பரவலாக அடுக்கவும்.
ஓவனில் 15 நிமிடம் வைத்து எடுத்தவுடன், சூடாக இருக்கும்போதே பிஸ்கெட்டின் மேல் நெய் தடவுங்கள்.
சுகாதாரமான நெய் பிஸ்கட் ரெடி!