1. இதர வாசிப்பு
  2. »
  3. அறுசுவை
  4. »
  5. இனிப்புகள்

முந்திரி பட்டர் பாசந்தி

முந்திரி பட்டர் பாசந்தி
முந்திரி பட்டர் பாசந்தி.. சொல்லும்போதே வாயில் எச்சில் ஊரும்.

தேவையான பொருட்கள

முந்திரிப் பருப்பு - 250 கிராம

புழுங்கலரிசி - 50 கிராம

பால் - ½ லிட்டர

தேங்காய் - ½ மூடி

சர்க்கரை - 375 கிராம

வெண்ணெய் - 75 கிராம

நெய் - 50 கிராம

மஞ்சள் - ½ துண்ட

பெருஞ்சீரகம் - ½ ஸ்பூன


செய்முற

முந்திரியை வெந்நீரில் ஊற வைக்கவும். அரிசியை தண்ணீரில் ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து முந்திரியையும் அரிசியையும் தனித்தனியே மைய அரைத்து வைக்கவும், ஒரு லிட்டர் பாலையும் 1/4லி பாலாக ஆகும் வரை சுண்டக் காய்ச்சி இறக்கவும். தேங்காயைத் துருவி அரைத்து கெட்டிப் பாலாக ஒரு டம்ளர் எடுக்கவும். முந்திரி விழுது, அரிசி விழுது, சுண்டிய பால், தேங்காய் பால், சர்க்கரை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.

மஞ்சள் துண்டை அம்மியில் அரைத்து, அதனுடன் பெருஞ்சீரகத்தையும் லேசாக அரைத்து ஒரு கரண்டிசாறு எடுத்து வடிகட்டி முந்திரி கலவையில் கலக்க வேண்டும். கடைசியில் வெண்ணெய், உருக்கிய நெய் இவற்றையும் சேர்த்து நன்றாக சர்க்கரையையும் கரைத்து ஒரு பாத்திரத்தில் பாதியளவு வரை ஊற்றி குக்கரில் வைத்து முப்பது நிமிட நேரம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
About Writer
Webdunia