1. இதர வாசிப்பு
  2. »
  3. அறுசுவை
  4. »
  5. இனிப்புகள்

பட்டர் பாதுஷா

பட்டர் பாதுஷா
பட்டர் பாதுஷா செய்து கொடுத்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள்.


தேவையான பொருட்கள்

அரிசி மாவு 1 கப்
வெண்ணெய் 1/2 கப்
சக்கரை 2 1/2 கப்
எண்ணெய் 1/4 கிலோ (ரீபைன்ட் ஆயில்)
செர்ரி பழம் அலங்கரிக்க

செய்முற

பச்சரிசியை சுமார் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊறிய பின், ஈரம் போக துணியில் உலர வைக்க வேண்டும்.

சற்று உலர்ந்த பின் மிக்ஸியில் நல்ல நைசான பவுடராக அரைத்து, சலித்துக் கொள்ளவும்.

மாவு லேசான ஈரத்துடன் இருக்க வேண்டும்.

சக்கரையையும் மிக்ஸியில் பவுடராக்கிக் கொள்ளவும்.

வெண்ணெயுடன் அரிசி மாவை நன்கு கெட்டியாக பிசையவும்.

பிசைந்த மாவை தடிமனான வட்டமாக செய்யவும்.

எண்ணெயில் பொரித்து, சூடாக இருக்கம் போதே, சக்கரை பவுடரில் புரட்டி எடுக்கவும்.

புரட்டி எடுத்தவுடன், நடுவில் செர்ரி பழத்தை வைத்து அழுத்தி விடவும். பட்டர் பாதுஷா ரெடி
About Writer
Webdunia