1. இதர வாசிப்பு
  2. »
  3. அறுசுவை
  4. »
  5. இனிப்புகள்

முந்திரி, பேரீச்சம் கோவா ரோல்

முந்திரி
முந்திரி, பேரீச்சம் கோவா ரோல் செய்வதற்கான வழிமுற


தேவையான பொருட்கள

பேரீச்சம் பழம் - 200 கிராம

முந்திரி - 100 கிராம

சக்கரை - 1 கப

தண்ணீர் கலக்காத பலன் - 1/2 லிட்டர

கொப்பரைத் தூள் - 50 கிராம

நெய் - சிறிதளவ

பால்கோவா - 500 கிராம

செய்முற

முதலில் பாலை அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சி பால்கோவா தயார் செய்து கொள்ளவும். அல்லது கடையில் விற்கும் பால்கோவாவை வாங்கிக் கொள்ளவும்.

பேரீச்சம் பழத்தை கொட்டை நீக்கி சிறு சிறு துண்டுகளாக்கவும். முந்திரியையும் சிறு சிறு துண்டுகளாக்கவும்.

சுத்தமான வெள்ளைத் துணியை தண்ணீரில் ஊற வைக்கவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து சக்கரையை கொட்டி அது பாகு பதத்திற்கு வந்தவுடன் அதில் பேரீச்சம் பழ துண்டுகளைப் போட்டு வேக விடவும்.

நன்றாக வெந்ததும் பால்கோவாவை அதில் போட்டு விடாமல் கிளறவும்.
ஐந்து நிமிடங்கள் கழித்து முந்திரி துண்டுகளைப் போட்டு அடுப்பை குறைத்து வைக்கவும்.

சிறிதளவு நெய் விட்டு கிளறிக் கொண்டே இருக்கும் போது பாத்திரத்தில் இருக்கும் கலவை கரண்டியில் ஒட்டாத பதத்திற்கு வந்தவுடன் இறக்கி விடுங்கள்.

அடுத்து வெள்ளை துணியை நன்கு பிழிந்து விரித்துப் போட்டு கொப்பரைத் தூளை தூவி விடவும்.

பாத்திரத்தில் இருக்கும் கலவையை துணியின் மீது கொட்டி அதன் மீது நெய் தடவிய வாழை இலையால் மூடி கலவையை சதுர வடிவத்தில் வரும் வரையில் ஒத்தி எடுக்கவும்.

வாழை இலையை எடுத்து விட்டு துணியை மெதுவாக தூக்கி அந்தக் கலவையை ரோல் போல் உருட்டவும்.

பிறகு அந்த ரோலை சூடு ஆறிய பிறகு கத்தியால் நறுக்கிக் கொள்ளவும்.
About Writer
Webdunia