புதுவிதமாக பரங்கிக்காய் பாயசம் செய்து ருசியுங்கள்.
தேவையான பொருட்கள் :
பரங்கிக்காய் 125 கிராம் சேமியா 50 கிராம் சர்க்கரை 2 கப் நெய் 2 மேஜைக்கரண்டி தண்ணீர் 2 கப் பால் 1/2 லிட்டர் ஏலப்பொடி 1 டீஸ்பூன் முந்திரிப்பருப்பு 12 திராட்சை 1 மேஜைக்கரண்டி
செய்முறை :
1. பரங்கிக்காயைத் தோல் சீவி, விதை நீக்கி, கொப்பரை துருவியில் துருவவும்.
2. வாணலியில் நெய் விட்டு, முதலில் சேமியாவை பொடி செய்து போட்டு வறுக்கவும்.
3. பிறகு துருவிய பரங்கிக்காயை ஒரு சிட்டிகை உப்பு போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
4. நன்றாக வதங்கிய பிறகு, 2 கப் தண்ணீர் விட்டு வேக விடவும்.
5. வெந்தவுடன் சர்க்கரை சேர்க்கவும்.
6. சர்க்கரை கரைந்து நன்றாக கொதித்து சேர்ந்தவுடன், காய்ச்சி வைத்திருக்கும் பாலைச் சேர்க்கவும்.
7. முந்திரிப் பருப்பை இரண்டாக நறுக்கி நெய்யில் வறுத்துக் கொண்டு, திராட்சையையும் வறுத்துக் கொண்டு, பாயசத்தில் போடவும்.
8. ஏலப்பொடியையும் சேர்க்கவும்.
|