முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  அறுசுவை  இனிப்புகள்
 
பாதாம் பருப்பு பாயஸம்
Webdunia
தேவையான பொருட்கள் :

பாதாம் பருப்பு 100 கிராம்
சக்கரை 200 கிராம்
பால் ¾ லிட்டர்
ஏலக்காய் 7
முந்திரி பருப்பு 10 கிராம்
சாரப்பருப்பு 10 கிராம்
பிஸ்தா பருப்பு 10 கிராம்
நெய் 5 டீஸ்பூன்
குங்குமப்பூ ஒரு சிட்டிகை



செய்முறை :

முந்திரிபருப்பை சிறு சிறு துண்டுகளாக்கவும்.


முந்திரி, சாரப் பருப்பு, பிஸ்தாம் பருப்பு முதலியவைகளை நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.


பாதாம் பருப்பை வெது வெதுப்பான வெந்நீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.


ஒரு மணி நேரத்திற்கு பிறகு பாதாம் பருப்பின் தோலை நீக்கி விடவும்.


தோலை நீக்கிய பாதாம் பருப்பு, முந்திரி, பிஸ்தா பருப்பு முதலியவைகளை தண்ணீர் விட்டு நன்றாக மையாக அரைத்துக் கொள்ளவும்.


அரை லிட்டர் அல்லது முக்கால் லிட்டர் தண்ணீருடன் அரைத்த விழுதையும் சேர்த்து, பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.


நன்கு கொதிக்கும் போது சக்கரையை போட்டு கரைய விடவும்.


சக்கரை கரைந்தவுடன் பாலை சேர்த்து, ஏலக்காய், குங்குமப்பூ முதலியவைகளை போட்டு இறக்கவும்.

இதனை ஐஸில் வைத்து, குளிர்ச்சியாக பரிமாறலாம்.
மேலும்
திரட்டுப்பால் (தேங்காய்)
அப்பம்
தேங்காய் பால்
பருப்பு போளி
தேங்காய் பிஸ்கட்
முக்கனி பாயசம்