முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  அறுசுவை  இனிப்புகள்
 
தேங்காய் பால்
Webdunia
தேவையான பொருட்கள் :

4 கப் தேங்காய் பாலுக்கு பெரிய தேங்காய் - 2

அரிசி - 2 டீஸ்பூன்

சர்க்கரை அல்லது வெல்லம் - 1 கப்

ஏலக்காய் - 7 அல்லது 8

பச்சை கற்பூரம் - 1/2 சிட்டிகை

செய்முறை :

தேங்காயை மிருதுவாகத் துருவிக் கொள்ளவும். கல்லுரல் அல்லது மிக்ஸியை நன்றாகக் கழுவித்துடைத்து, துருவியை தேங்காயையும் அரிசியையும் போட்டுச் சேர்த்து நன்றாக அரைத்து, கொஞ்சம் கொஞ்சமாகப் பாலைப் பிழியவும். முழுவதையும் பிழிந்துவிட்டு, அந்தத் தேங்காயை மறுபடியும் சுமார் 1 கப் நீர் விட்டு, நன்றாக அரைத்துப் பிழியவும். முதலில் பிழிந்து வைத்துக் கொள்ளப்பட்ட பாலையும், இரண்டாவதாக பிழிந்த பாலையும், ஒரு மெல்லிய வெள்ளைத் துணியிலோ அல்லது சல்லடையிலோ வடிகட்டிவிட்டு, தேங்காய்த் துருவலோடு சர்க்கரையும் மறுபடியும் கொஞ்சமாக நீர் வீட்டு அரைத்து, துணியில் போட்டு, ஒட்டப் பிழிந்து வடிகட்டி, பாலுடன் சேர்த்து அடுப்பில் வைக்கவும். பாலைக் கரண்டியால் அடிக்கடி கிளறிவிட்டு, நல்ல சூடு வந்ததும், சர்க்கரையை அல்லது வெல்லத்தைப் போட்டுக் கிளறி விட்டு, கொதி வரும் சமயங்களில் இறக்கி, ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம் இவற்றைப் போடவும்.

குறிப்பு : கொதித்துவிட்டால், பால் முறிந்து போய்விடும். நன்றாகக் காயாவிட்டால் பச்சை வாசனை வரும். எனவே, நன்கு காய்ந்து, கொதி வரும் சமயம் பார்த்து இறக்கிவிட வேண்டும்