முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  அறுசுவை  இனிப்புகள்
 
முக்கனி பாயசம்
Webdunia
தேவையானவை :

மாம்பழம் - 200 கிராம்
பலாப்பழம் - 200 கிராம்
வாழைப்பழம் - 200 கிராம்
நெய் - 2 தேக்கரண்டி
முந்திரி - 10
சர்க்கரை - 1/2 கிலோ
தேங்காய் - 1/2 மூடி

செய்முறை :

மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் மூன்றையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

2 தேக்கரண்டி நெய்விட்டு முந்திரியை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அந்த நெய்யிலேயே நறுக்கிய பழங்களை, சற்று நிறம் மாறும் வரை வதக்க வேண்டும். இப்படி வதங்கும் போதே பழங்கள் வெந்து விடும்.

நன்கு வெந்ததும் பழங்களை மசித்துக் கொள்ளவும்.

அரைமூடி தேங்காயிலிருந்து முதலில் பால் எடுக்கவும்.

முதலில் எடுத்த பாலை மட்டும் மசித்து வைத்துள்ள பழங்களில் ஊற்றவும்.

பின் அரை கிலோ சர்க்கரையை அதில் சேர்த்து நன்கு கிளற வேண்டும். இறக்குமுன் முந்திரியை சேர்க்கவும்.