பயத்தம் பருப்பு-1 கப் பால்-2 கப் வெல்லம்-1 கப்-கொதிக்க வைத்து வற்ற விடவும் பொடித்த ஏலக்காய்-சிறிதளவு வறுத்த முந்திரி பருப்பு-1 பிடி
பயத்தம் பருப்பை சிறிதளவு (1 டீஸ்பூன்) நெய்யில் வறுத்து, இரு மடங்கு தண்ணீரில் வேகவிடவும். ப்ரெஷர் குக்கரில் செய்தால் மையமாக வெந்து விடும். ஆனால், வேக விட்டால் தனித்தனியாக இருக்கும். பின் பாலை விட்டு, நன்றாகக் கொதி வந்த பின், வெல்லம் சேர்க்கவும் (எப்பவுமே வெல்லம் சேர்க்கும் போது அப்படியே சேர்க்காமல் தண்ணீர் சேர்த்துக் கரைத்து விட்டால் மண்ணெல்லாம் அடியில் தங்கி விடும்). பின் நன்றாகக் கொதி வந்தவுடன் ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும்.
|