முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  அறுசுவை  இனிப்புகள்
 
பாதாம் அல்வா
Webdunia
பாதாம் அல்வா செய்வது மிகவும் எளிது. நெய் ரொம்ப விடத் தேவையில்லை. ஆனால் தோலை உரிப்பது தான் கொஞ்சம் டைம் எடுக்கும் வேலை. ஆறுக்கு பத்து பருப்பு கொடுத்தால் எல்லாரும் உரிப்பார்கள். வாயில் போனது போக தேறும்!!
வென்னீரில் ஒரு அரை மணி நேரம் ஊற வைத்தால் தோல் எடுக்க முடியும்.
உரித்த பாதாமை சிறிது பால் விட்டு அரைத்து விழுதாக்கிக் கொள்ள வேண்டும்.

பாதாம்-1 கப்
சர்க்கரை-2 கப்
நெய்-1/2 கப்
குங்குமப்பூ-1 சிட்டிகை
பாகு வைக்க 1 கப் தண்ணீர்

எ தண்ணீரும் சர்க்கரையும் சேர்த்து அடுப்பில் வைத்து

எ கொதிக்கும் போது ஒரு கம்பிப் பதம் வரும் முன்னே

எ லேசாக பிசுபிசு பதத்திலேயே அரைத்த பாதாம் விழுதைப் போட்டு, நன்றாக சுருளக் கிளற வேண்டும்.

எ பாதாம் பருப்பு வேக நிறைய டைம் தேவையில்லை.

எ வெந்தபிறகு நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கிளறி,

எ கலர் வேண்டுமென்றால் சிறிது கேசரி கலர் போட்டு,

எ குங்குமப்பூவையும் தூவி இறக்கி வைக்க வேண்டும்.

பாதாம் அல்வா ப்ரிஜ்ஜில் வைத்து 1 மாதம் வரை கூட கெடாமல் வைத்து சாப்பிடலாம். ஆனால் பரிமாறும் முன் ஒரு பாத்திரத்தில் வென்னீரைக் கொதிக்க வைத்து, அதில் பாதாம் அல்வா வைத்த கிண்ணத்தை வைத்துச் சூடாக்கினால், நன்றாக மெதுவாக இருக்கும். ஸ்பூனால் எடுத்துச் சாப்பிடும் பதத்தில் இருக்கும்.

செய்து பாருங்களேன். ஓவராகக் கிளறினால் கெட்டியாகி விடும். கவலைப்பட தேவையில்லை. சிறிது பால் விட்டு மீண்டும் கிளறினால் தளர ஆகி விடும்.

<http://www.webulagam.com/cookery/veg/0610/25/1061025015_1.htm>

மாலாடு


பொட்டுக் கடலை மாவு-2 கப்
சர்க்கரை-2 கப்
பொடித்த ஏலக்காய்-2 டீஸ்பூன்
வறுத்த முந்திரிப்பருப்பு-1/2 கப்
சூடான நெய்-2 கப்

எ பொட்டுக் கடலை மாவு, சர்க்கரைப் பொடி இரண்டையும் சேர்த்துக் கலந்து
எ ஏலக்காய் பொடித்துப் போட்டு,
எ வறுத்த முந்திரிப் பருப்பையும் சேர்த்துக் கலந்து
எ சூடான நெய் ஊற்றிக் கலந்து பிசைந்து
எ சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்து, பாட்டிலில் அல்லது காற்றுப் போகாத டப்பாவில் அடைத்து வைத்து ஒரு மாதம் வரைக்கும் வைத்துச் சாப்பிடலாம்.

மிகவும் நேரம் எடுக்காத, செலவு இல்லாத சுவையான எளிமையான செய்முறையோடு கொண்ட இந்த ஐட்டத்தை எல்லாரும் செய்து பார்க்கலாம். அனுபவம் தேவையில்லை.