பூண்டுத் துவையல் செய்து பார்த்துவீட்டீர்களா. துவையல் வரிசையில் இன்று நாம் பார்க்கப் போவது வெங்காயத் துவையல்.
தேவையானப் பொருட்கள்
வெங்காயம் உளுந்தப் பருப்பு எண்ணெய் சிவப்பு மிளகாய் புளி உப்பு பெருங்காயம்
அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி உளுந்தப் பருப்பு, மிளகாயை சிவக்க வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
அதை தட்டில் கொட்டிக் கொண்டு மீண்டும் கொஞ்சம் எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கிக் கொண்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மிக்சியில் வதக்கிய உளுந்தம் பருப்பு, மிளகாய், பெருங்காயம், உப்பு போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் அதில் வெங்காயத்தையும் சேர்த்து அரைக்கவும்.
வெங்காயத் துவையல் தயார்.
செய்ய எளிதானது, சுவையும் அருமையாக இருக்கும். தாளித்து சாப்பிட விரும்புவோம் தாளித்துப் பயன்படுத்தலாம். இதிலேயே தேங்காய் சேர்த்தும் அரைத்துக் கொள்ளலாம்.
|