திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 14 ஆகஸ்ட் 2024 (07:37 IST)

தோனி, ஏன் பேட்டிங் செய்ய சீக்கிரமாக வருவதில்லை… அஸ்வின் அளித்த விளக்கம்!

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சி எஸ் கே அணி நடந்து முடிந்த சீசனில் ப்ளே ஆஃப்க்கு செல்லாமல் லீக் போட்டிகளோடு வெளியேறியது. இந்த சீசனில் எட்டாவது வீரராகதான் களமிறங்கினார். அவர் பேட் செய்ய வரவேண்டும் என ரசிகர்கள் கோஷம் எழுப்பியபோதும் அவர் கடைசியாகதான் அவர் பேட் செய்ய வந்தார்.

இதனால் அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவருக்கு மூட்டுப்பகுதியில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக அவரால் தொடர்ந்து பேட்டிங் செய்ய முடியாத சூழல் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ள தோனி “அடுத்த சீசன் குறித்து யோசிக்க நிறைய நேரம் இருக்கிறது. எத்தனை வீரர்களை பிசிசிஐ தக்கவைத்துக்கொள்ளலாம் என அறிவிக்கிறது என்பதைப் பொறுத்து என் முடிவு அமையும். இப்போதைக்கு எங்கள் கையில் எதுவும் இல்லை. அடுத்த சீசனுக்கான விதிமுறைகள் தெரிந்தபின்னர் நான் எனது முடிவை அறிவிப்பேன். அது அணியின் நலனுக்கு முக்கியத்துவம் கொண்டதாக இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தோனி குறித்து பேசிய இந்திய வீரர் அஸ்வின் “மூட்டுப்பகுதியில் உள்ள திரவம் சரியாக சுரக்காதபோது அவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலமாக செயற்கை திரவம் ஏற்றப்படும். அந்த சிகிச்சைதான் தோனிக்கு செய்யப்பட்டுள்ளது. தோனி கடந்த 20 ஆண்டுகளாக விக்கெட் கீப்பராக செயல்படுகிறார். அவர் நாள் முழுவதும் கால்களை மடக்கி நிற்கிறார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் 35 வயதுக்கு மேல் விக்கெட் கீப்பர் பணியை தொடர்வதில்லை. ஆனால் தோனி தொடர்ந்து விக்கெட் கீப்பராக செயல்பட்டுள்ளார். அதனால்தான் அவர் நடந்து முடிந்த தொடரில் சீக்கிரமாக பேட்டிங் செய்ய வருவதில்லை. அவரின் மூட்டுவலிப் பிரச்சனை எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்துதான் அவர் அடுத்த சீசனில் விளையாடுவது உள்ளது” எனக் கூறியுள்ளார்.