வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 22 டிசம்பர் 2024 (09:54 IST)

பயிற்சியின் போது இடது காலில் காயமான ரோஹித் ஷர்மா… வைரலான புகைப்படம்!

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளை வென்று 1-1 என்ற கணக்குடன் சமனில் உள்ளன. மூன்றாவது போட்டியை இந்திய அணி போராடி டிரா செய்தது.

இந்த தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் ஃபார்ம் கவலை அளிக்கும் விதமாக உள்ளது.

இதுவரை அவர் ஆடிய நான்கு இன்னிங்ஸ்களிலும் ஒற்றை இலக்க ரன்களை தாண்டவில்லை. இந்நிலையில் மெல்போர்ன் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பயிற்சியில் ஈடுபட்டிருந்த ரோஹித் ஷர்மாவுக்கு இடது காலில் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே கே எல் ராகுலும் கையில் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.