திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (16:18 IST)

வயசு வெறும் நம்பர்தான்… தோனியின் முக்கியமான சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த தொடரில் நடந்து முடிந்த இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியை இலங்கை வெல்ல, இன்னொரு போட்டி சமனில் முடிந்தது. இதன் மூலம் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணிக் கேப்டன் ரோஹித் ஷர்மா தோனியின் முக்கியமான சாதனையை முறியடித்தார். இந்த போட்டியில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கிய போது அவருக்கு வயது 37 ஆண்டுகள் 96 நாட்கள். இதன் மூலம் இந்திய அணியை அதிக வயதில் தலைமைத் தாங்கிய கேப்டன் என்ற பெருமைக்குரியவர் ஆகியுள்ளார்.

இதற்கு முன்னர் தோனி 37 வயது 80 நாட்களில் இந்திய அணியை வழிநடத்தியதுதான் சாதனையாக அமைந்திருந்தது.