ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: சனி, 3 ஆகஸ்ட் 2024 (08:16 IST)

12 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பரை சந்தித்த தோனி… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

இந்திய கிரிக்கெட்டில் உருவான மிகச்சிறந்த கேப்டனாகவும் கிரிக்கெட்டராகவும் தோனி உள்ளார். சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அவர் இப்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார்.

ஐபிஎல் தவிர்த்து மற்ற நேரங்களில் விவசாயம், நண்பர்களோடு சுற்றுப்பயணம் என மகிழ்ச்சியாக வாழ்க்கையைக் கழித்து வருகிறார். தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் காலடி எடுத்து வைத்தார். அந்த வகையில் 2007 ஆம் ஆண்டு நடந்த டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக் கோப்பை வெல்ல முக்கியக் காரணமாக இருந்து கடைசி ஓவரை வீசிய ஜோஹிந்தர் ஷர்மாவை அவர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துள்ளார்.

இதுகுறித்து பகிர்ந்துள்ள “கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு தோனியுடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது” எனக் கூறியுள்ளார். ஜோஹிந்தர் ஷர்மா தற்போது காவல்துறை அதிகாரியாக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.