செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 31 ஜனவரி 2018 (05:07 IST)

2 திருமணம் செய்யாவிட்டால் சிறை! வித்தியாசமான சட்டம் இயற்றிய நாடு

இந்தியா உள்பட பல நாடுகளில் இரண்டாவது திருமணம் செய்தால் குற்றம் என்ற நிலையில் எரித்ரியா என்ற நாட்டில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைத்தண்டனை என்ற புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

எரித்ரியா நாட்டில் அடிக்கடி போர் நடந்து கொண்டிருக்கும் என்பதால் போரில் ஆண்கள் பலர் மடிந்து வருகின்றனர். எனவே அந்நாட்டில் ஆண்களின் விகிதாச்சாரத்தை விட பெண்களின் விகிதாச்சாரம் குறைந்து கொண்டே வருகின்றது

இதனை சரிக்கட்டவே அந்நாட்டில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிகிறது. இரண்டு திருமணம் செய்ய ஆண்கள் மறுத்தாலோ, இரண்டாவது திருமணம் கணவர் செய்ய முதல் மனைவி மறுத்தாலோ இரண்டு பேர்களுக்கும் சிறைத்தண்டனை உண்டு. அதேபோல் ஒரு ஆண் இரண்டு திருமணங்களுக்கு மேல் திருமணம் செய்தாலும் அந்நாட்டில் குற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.