நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஷன் ஷோ சகோதரிகள்

Last Modified செவ்வாய், 30 ஜனவரி 2018 (23:48 IST)
அமெரிக்காவை சேர்ந்த மாடல் சகோதரிகள் ஜிஜி ஹடிட் மற்றும் பெல்லா ஹடிட், உலகில் உள்ள ஐம்பது டாப் ஃபேஷன் அழகிகளின் பட்டியலில் உள்ளவர்கள். கடந்த 2013ஆம் ஆண்டு முதல் ஃபேஷன் ஷோவில் கலந்து கொண்டு கலக்கி வரும் இந்த சகோதரிகளுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு.

இந்த நிலையில் மாடல் சகோதரிகள் ஜிஜி ஹடிட் மற்றும் பெல்லா ஹடிட் ஆகிய இருவரும் பிரிட்டனி முன்னணி பத்திரிகையான வாஹ் () என்ற பத்திரிகைக்காக கூட்டாக நிர்வாண போஸ் கொடுத்துள்ளனர். மேலும் இருவரும் தனித்தனியாகவும் இதே இதழுக்காக நிர்வாண போஸ் கொடுத்துள்ளார்களாம்/

இந்த பத்திரிகையில் வரும் மார்ச் மாத இதழில் இந்த நிர்வாண புகைப்படங்கள் வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னர் இந்த சகோதரிகளே தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.


webdunia

இதில் மேலும் படிக்கவும் :