1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 24 டிசம்பர் 2024 (17:16 IST)

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக இருந்த நீதிபதி அருண்குமார் மிஸ்ரா என்பவர் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ராமசுப்பிரமணியன் என்ற தமிழரை ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.  

இந்த நிலையில், தமிழரான ராமசுப்பிரமணியம் நியமனத்திற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ராகுல் காந்தி மற்றும் கார்கே கூறிய போது, "தேர்வு குழுவால் பாரபட்சம் இல்லாமல் நியமனங்கள் செய்யப்பட வேண்டும்" என்றும், "இந்த நியமனம் முன்னரே தீர்மானிக்கப்பட்டதாகும்" என்றும் தெரிவித்தனர். மேலும், "இதில் பரஸ்பர ஆலோசனை மற்றும் ஒருமித்த கருத்து புறக்கணிக்கப்பட்டுள்ளது" என்றும் குற்றம் சாட்டினர்.

தேசிய மனித உரிமை தலைவர் நியமனத்திற்கு கூட்டு குழுவை, கூட்டு குழுவின் ஆலோசனையை கேட்காமல், காங்கிரஸ் கொடுத்த பெயர்களை பரிசீலனை செய்யாமல் நியமனம் செய்யப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் பதவிக்கு, காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ரோஹிண்டன் பாலின் நாரிமன் மற்றும் கே. எம். ஜோசப் ஆகியோரை முன்மொழிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva