13 வயது தங்கையை கற்பழித்துக் கொன்ற அண்ணன் கைது

rape
Last Modified செவ்வாய், 30 ஜனவரி 2018 (12:53 IST)
பாகிஸ்தானில் 13 வயது தங்கையை, அவரது அண்ணனே கற்பழித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய கால கட்டத்தில் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படாமல் இருப்பதால், அவர்களின் அட்டுழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இது போன்ற கொடிய மிருகங்கள் பெண்களை கற்பழிப்பதோடு இல்லாமல் அவர்களை கொடூரமாக கொலையும் செய்கின்றனர்.
 
இந்நிலையில் பாகிஸ்தானின் இஸ்மாயில் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வந்தனர். சிறுமியின் அண்ணன் மீது சந்தேகித்த போலீஸார், அவரிடம் விசாரித்தனர். முதலில் ஒன்றும் தெரியாதவன் போல் பேசிய அவனை, போலீஸார் போலீஸ் பாணியில் விசாரிக்கவே, அவன் தனது தங்கையை கற்பழித்துக் கொன்றதை ஒப்புக் கொண்டான்.
 
இதனையடுத்து போலீஸார் அவனை கைது செய்தனர். அந்த காம மிருகத்திற்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :